இலங்கை

பாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துங்கள் – தூதுவர்களிடம் மன்றாடினார் ரணில் !

 

இலங்கை மீதான பாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்துமாறு இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை இன்று அலரி மாளிகையில் சந்தித்து பேசும்போது கேட்டுக் கொண்டார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

“ நாட்டின் நிலைமையை நாங்கள் சீர்படுத்தியுள்ளோம். பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்.அதேசமயம் இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தளர்த்துங்கள்” – என்றும் வெளிநாட்டு தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டார் ரணில்