மாகாணச் செய்திகள்

பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

 

நூருள் ஹுதா உமர்.

கொவிட்-19, கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைளுக்கு உதவியாகவும் அதற்காகவும் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கந்தளாய்  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு மருந்து தொளிக்கும் இயந்திரம்,  முகக்கவசம், காலனி  உள்ளிட்ட பாதுகாப்பு அணிகலன்கள் கந்தளாய்  சுகாதார வைத்திய அதிகாரியிடம் UnV நிறுவனம் மற்றும் அல்ஹித்மத்துல் உம்மா நிறுவனம் ஆகியவற்றினால்  அன்பளிப்பு செய்யபட்டன.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹ்ரூப், அல்- ஹித்மத்துல் உம்மா நிறுவன முக்கியஸ்தர்கள், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அஜித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.