இலங்கை

பாதுகாப்புக் காரணங்களால் இடம்மாறிய தஹாமின் திருமண நிகழ்வு !

 

ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேனவின் திருமணம் நாளை கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் நடைபெறவுள்ளதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஷங்ரிலா ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெறவிருந்த போதும் தாக்குதல் சம்பவத்தினையடுத்து அங்கு இந்த நிகழ்வை நடத்த இரு வீட்டாரும் விரும்பவில்லையெனவும் வேறு ஒரு முகூர்த்த நாளும் உடனடியாக இல்லாதபடியால் நாளை ஹில்ரனில் இதனை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

பிரபல தொழிலதிபர் வீரரத்னவின் புதல்வி நிபுணியை கரம்கோர்க்கும் தஹம் , இந்த நிகழ்வுக்கு நெருங்கிய சில உறவுகளுக்கே அழைப்பு விடுத்துள்ளார்.