இலங்கை

பாக். பிரதமர் இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த ஆண்டிற்கான தமது முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புக்களில் பங்கேற்க உள்ளார்.

மேலும், வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றம் மற்றும் விளையாட்டு இராஜதந்திர முயற்சி உட்பட பல உயர்மட்ட ஈடுபாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கீழே அழுத்துவதன் ஊடாக எமது பேஸ்புக் வழியாக நேரடி ஒளிபரப்பைக் காணலாம்