Breaking News

பாகிஸ்தான் பாதுகாப்புக் குழு இலங்கையில் !

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 17 பேர் கொண்ட குழு பாகிஸ்தான் விமானப்படைத்தளபதி எயார் கமடோர் முஸ்தபா அன்வர் தலைமையில் இலங்கை வந்துள்ளது .

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற)ஷஹீத் அஹ்மத்தை இன்று அக்குழு பாகிஸ்தான் தூதரகத்தில் சந்தித்தது.

முக்கிய படை அதிகாரிகளை கொண்டுள்ள இந்தக் குழு இலங்கையில் பாதுகாப்பு மற்றும் அரச உயர்த்துறை முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலையில் பயிலும் நேபாள -ஈரான் – பங்களாதேஷ் நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் இக்குழுவில் அடங்குகின்றனர்.