விளையாட்டு

பாகிஸ்தான் இலங்கை இன்று மோதல்

உலகக்கிண்ண தொடரின் லீக் போட்டிகளில் இன்றையதினம் இலங்கை அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இரண்டு அணிகளும் தலா இவ்விரண்டு போட்டிகளில் விளையாடி, ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று சம இடத்தில் இருக்கின்றன.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் சுரங்க லக்மலுக்கு பதிலாக ஜீவன் மெண்டிஸ் இணைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் லஹிரு திரிமன்னவிற்கு பதிலாக அவிஸ்க பெர்ணாண்டோ இணைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றங்களும் இல்லை.