உலகம்

பாகிஸ்தானுக்கு தொடரும் பொருளாதார நெருக்கடி..?

சவுதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியமும் 21,000 கோடி ரூபாய் கடனை உடனடியாக திரும்ப செலுத்துமாறு பாகிஸ்தானை வலியுறுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.

2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றதும், அந்நாட்டுக்கு 21,000 கோடி ரூபாய் கடன் உள்பட 43,400 கோடி ரூபாய் நிதி உதவியை சவுதி அரேபியா அறிவித்தது.

சவுதிக்கு மாற்றாக புதிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பை பாகிஸ்தான் உருவாக்க முயன்றதால், கடனை உடனடியாக திரும்ப செலுத்த பாகிஸ்தானுக்கு சவுதி அரசு நெருக்கடி கொடுத்தது.

அந்த கடனை சீனாவிடம் இருந்து கடன் வாங்கி பாகிஸ்தான் செலுத்தி வருகிறது. அதே பாணியில் தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் 21,000 கோடி ரூபாய் கடனை உடனடியாக செலுத்துமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.