Breaking News

பாகிஸ்தானில் விமான விபத்து: அனைவரும் உயிரிழந்திருக்கலாமென அச்சம் !

 

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் சென்ற 100 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற விமானம் ஏர் பஸ் ஏ 30 பஸ் உள்நாட்டு விமானம் கராச்சியில் தரையிறங்கும் போது தீ பற்றி எரிந்து விழுந்தது. ஜின்னா கார்டன் அருகே நடந்த இந்த விபத்தில் 100 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

விமானத்தில் தொழிநுட்ப கோளாறு இருப்பதால் தரையிறங்க முடியாத நிலை இருப்பதாக முன்னதாக விமானி அறிவித்தார்.

உயிர்ச்சேதம் குறித்து உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் இல்லை . சம்பவ இடத்தில் மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரங்கல்

இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பதாவது:

சம்பவம் குறித்து கேள்விப்பட்டு கவலையுற்றேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளேன். விபத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் . என்று அவர் கூறியுள்ளார்