உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி கைது

 

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பணச்சலவை குற்றச்சாட்டில் அவர் இஸ்லாமாபாத்தில் வைத்து கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கும் அவரது சகோதரிக்கும் முன்பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

போலிக் கணக்குகள் மூலம், மோசடி செய்யப்பட்ட நிதியை மறைத்து வைத்திருப்பதாக அவர்கள் இருவரின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்தாரி ஏற்கனவே நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்ததுடன், 2008 முதல் 2013 வரையில் ஜனாதிபதியாகவும் இருந்தார்.

அவர், புகழ்பெற்ற முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.