விளையாட்டு

பாகிஸ்தானின் கனவுகள் பாழாகின – அரைஇறுதி அணிகள் நாலாகின.

 

2019 ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு 4 அணிகளும் தங்களை உறுதிசெய்துள்ளன.

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியுடனான வெற்றியின் பின்னர் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

பாகிஸ்தான் அணி இன்று நடைபெற்ற போட்டியில் 316 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேசை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தெரிவாகும் என்ற நிலையில் விளையாடியது.

எனினும் இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 315 ஓட்டங்களை மாத்திரமே 50 ஓவர்களில் பெற்றுக் கொண்டது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் இறுதி வாய்ப்பையும் தவற விட்டது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கான அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அவுஸ்திரேலியா இந்தியா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.