இலங்கை

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வு ஆரம்பம் ,பொலிஸார் குவிப்பு!

– வன்னி செய்தியாளர் –

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வருடந்தோறும் இடம்பெறும் “தமிழர் திருநாள் ” பொங்கல் உற்சவ நிகழ்வு இன்றையதினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது .

பொங்கல் நிகழ்வுக்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் தற்போது நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் அரச புலனாய்வாளர்கள் ஆலய சூழலில் குவிக்கப்பட்டு பொங்கல் நிகழ்வுகளையும் பங்குகொள்ளும் மக்களையும் புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .

அத்தோடு தென்பகுதியிலிருந்து பௌத்த துறவிகள் அடங்கிய குழுவினரும் ஆலய பகுதிக்கு வருகை தந்துள்ளனர் .மூன்று நாட்களுக்கு முன்னரே பொங்கல் நிகழ்வுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு பொலிஸாரிடம் அனுமதி கோரியுள்ள போதிலும் இதுவரையில் பொலிஸார் அந்த அனுமதிகள் எதனையும் வழங்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர் .