பழம்பெரும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா!
தமிழ் திரையுலகின் பழம்பெரும் இயக்குனரான எஸ்.பி.முத்துராமனுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
நேற்று முன்தினம் உடல் சோர்வால் மருத்துவமனைக்கு சென்ற முத்துராமனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையிலேயே அவர் கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
நேற்று அவருடைய 86ஆவது பிறந்தநாளுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்கு கொவிட் நிமோனியா இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் இருக்கும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவர் உடல்நலம் குணமாகி விரைவில் வீடு திரும்ப அவரது குடும்பத்தினரும் திரையுலகினரும் பிரார்தித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எமது செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்
Facebook Page- தமிழன் செய்திகள்
Facebook Group- தமிழன் செய்திகள்
Whatsapp Group- தமிழன் செய்திகள்