விளையாட்டு

பல்வேறு சாதனைகளை படைத்த ஒரு போட்டி

 

நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் வீராங்கனை அஞ்சலி ஷான்ட்,ஓட்டமெதனையும் கொடுக்காமல் ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றி, சர்வதேச போட்டிகளில் இதுவரை எவரும் நிகழ்த்தாத சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

மலைத்தீவு பெண்கள் அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற இருபதுக்கு-20 போட்டியில், 2.1 ஓவர்களை வீசிய அஞ்சலி, ஓட்டமெதனையும் கொடுக்காமல் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

சர்வதேச போட்டியொன்றில் வீராங்கனை நிகழ்த்திய புதிய சாதனையாக இது பதிவாகியுள்ளது.

மேலும், இந்தப் போட்டியில் மாலைத்தீவு அணி, 16 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தமையானது மற்றுமொரு சாதனையாக பதவிவாகியுள்ளதோடு, இந்தப் போட்டியில் நேபாள அணி விக்கெட் எதனையும் இழக்காமல் வெற்றிபெற்றமை மற்றுமொரு சாதனையாக பதிவாகியுள்ளது.

16 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய நேபாள அணி 0.5 ஓவர்களில் 17 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இதன் மூலம் ஒரு ஓவருக்குள் வெற்றியிலக்கை அடைந்த முதல் போட்டியாகவும் இது பதிவாகியுள்ளது.

இந்தப் போட்டியில் மாலைத்தீவு அணி சார்பாக 9 வீராங்கனைகள் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தமை மற்றுமொரு சாதனையாக பதிவாகியுள்ளது.