இலங்கை

பல்டியடித்தது அரசு – ஊடகங்கள் மீது கட்டுப்பாடு இல்லையாம் !

 

ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுமாறு கூறியே தகவல் திணைக்களம் ஊடக நிறுவனங்களை கேட்டுக் கொண்டதாகவும் , மாறாக எந்த கட்டுப்பாடுகளையோ தடைகளையோ விதிக்கவில்லையென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

செய்திகளை வெளியிடும்போது உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையே வெளியிடுமாறு கோரியதாக அரச தகவல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

ஊடகங்கள் மீதான தடை என்று வெளிவந்த தகவலால் பல தரப்பில் விமர்சனங்கள் வந்ததையடுத்து அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது