இலங்கை

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் !

-யாழ் நிருபர்-

யாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தி­லி­ருந்து இந்­தி­யா­வுக்கு முத­லா­வது வானூர்தி அடுத்த மாதம் தனது பய­ணத்தை மேற்­கொள்­ளும். இதற்­கு­ரிய வகை­யில் முதல்­கட்ட அபி­வி­ருத்­திப் பணி­ இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்­கை­யின் மூன்­றா­வது பன்­னாட்டு வானூர்தி நிலை­ய­மாக, பலாலி வானூர்தி நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்­யும் பணி­கள் அமைச்­சர் அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யில் ஆரம்­பிக்­கப்­பட்டது. 19.5 பில்­லி­யன் ரூபா செல­வில் பிராந்­திய வானூர்தி சேவை­களை நடத்­தக் கூடிய வகை­யில் பலாலி வானூர்தி நிலை­யம் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது.இரண்டு கட்­டங்­க­ளாக பலாலி வானூர்தி நிலைய அபி­வி­ருத்­திப் பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளமை குறிப்பிடத்தக்கது.