இலங்கை

பலாங்கொடையில் பன்றி இறைச்சிக் கடை திறக்க அனுமதி – ஐ.தே க .உறுப்பினரின் பிரேரணை நிறைவேறியது

 

பலாங்கொடையில் பன்றி இறைச்சிக் கடை ஒன்றை திறக்க அனுமதி கோரி நகர சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஒன்பது மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

சபையின் அமர்வு இன்று நடைபெற்றபோது பிரேரணை ஒன்றை முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் திருமதி சுனேத்ரா வீரசிங்க ,பலாங்கொடை நகரில் பன்றி இறைச்சிக் கடை ஒன்றை திறக்க அனுமதி வழங்கப்படுமென கோரியிருந்தார் .பின்னர் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ,ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.எதிராக நான்கு வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.