விளையாட்டு

பலவீனமான அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பும் இலங்கை 


இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்திலிருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக 10 சிரேஷ்ட விலகியுள்ள நிலையில், பலவீனமான அணியொன்று அந்த நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மற்றும் இலங்கை அணியினருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கிரிக்கெட் சபை விளக்கமளித்துள்ளது.

எவ்வாறெனினும், இரண்டு வார சுற்றுப்பயணத்தில் பங்கேற்காமல் இருப்பதற்கு 10 வீரர்கள்  தீர்மானித்தனர்.

இந்நிலையில், முக்கிய வீரர்கள் பலர் பங்கேற்காத நிலையில், இலங்கையின் பலவீனமான அணியொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.

2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவமே இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பில் அச்சம்கொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  10 வீரர்கள்  
  • நிரோஷன் திக்வெல்ல
  • குசல் ஜனித் பெரேரா
  • தனன்ஜய டி சில்வா
  • திசர பெரேரா
  • அகில தனன்ஜய
  • லசித் மாலிங்க
  • அஞ்சலோ மெதிவ்ஸ்
  • சுரங்க லக்மால்
  • தினேஷ் சந்திமால்
  • திமுத் கருணாரத்ன