விளையாட்டு

பறிபோகும் மாலிங்கவின் தலைமைப் பதவி

 

இந்திய அணியுடனான, மற்றொரு அவமானகரமான தொடர் தோல்வியை அடுத்து, தேசிய கிரிக்கெட்  அணிக்கு (இருபதுக்கு-20) பதிய தலைவரை நியமிக்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், தசுன் ஷானக புதிய தலைவராக நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு பின்னர் லசித் மாலிங்க தலைவராக நியமிக்கப்பட்டார்.

எனினும் அனைத்து வீரர்களையும் ஒன்றிணைப்பதற்கு மhலிங்கவால் முடியாமல் போனதோடு, கடும் விமர்சனங்களும் வெளியானது.

இதனையடுத்து, தலைமைப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதோடு, ஒருநாள் மற்றும் டெஸட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டார்.

லசித் மாலிங்கவின், தலைமையின் கீழ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், அவர் இந்தியாவில் அணியின் போக்கை மாற்றியமைக்கhவிடின், அவரது தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் எனத் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விடயத்தை கருத்திற்கொண்டும், தசுன் ஷானக பாகிஸ்தானில் பெற்றுக்கொடுத்த வெற்றியையும் கருத்திற்கொண்டு அவருக்கு தலைமைப்பதவி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.