இலங்கை

பறிபோகிறது மதுஷ் கொள்ளையிட்ட இரத்தினக்கல் !

மாக்கந்துர மதுஷின் சகாக்களால் பன்னிப்பிட்டியில் கொள்ளையடிக்கப்பட்ட இரத்தினக்கல் அரசுடைமையாக்கப்படவுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன .

இது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பொலிஸ் மா அதிபர் கோரியிருப்பதாக அறியமுடிகின்றது.

இந்த இரத்தினக்கல் உரிமையாளர் என்று சொல்லப்படும் பன்னிப்பிட்டி வர்த்தகர் இது தொடர்பில் உரிய ஆவணங்களை வைத்திருக்காமையும் இரத்தினக்கல் அதிகாரசபையின் சான்றிதழை கொண்டிராமையும் இரத்தினக்கல் அரசுடைமையாக பிரதான காரணங்கள் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

எவ்வாறயினும் இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள பன்னிப்பிட்டிய வர்த்தகர் சட்ட நடவடிக்கைளை எடுக்காத தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது