உலகம்

பறவைகள் மோதியதால் ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

ரஷ்யாவில் பறவைகள் மோதியதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டது. இதனால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ரஷ்யாவில் 226 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் சென்று கொண்டிருந்த உரல் ஏர்லைன்ஸ் விமானம், பறவைகள் மோதியதில் சேதம் அடைந்தது. விமானத்தின் என்ஜின் பகுதியில் சேதம் ஏற்பட்டதால், விமானம் அவசர அவசரமாக தரையிறக்கபட்டது. மொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலப்பரப்பில் விமானம் தரையிறங்கியது.

இதில், விமானத்தில் பயணித்த 23 பேர் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் ஏற்படவில்லை. Zhukovsky விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் Simferopol விமான நிலையத்திற்கு செல்ல இருந்தது.