பருத்தித்துறையில் 195 கிலோ கஞ்சா மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பற்றை ஒன்றுக்குள் இருந்து 195 கிலோ கஞ்சாவை இன்று மாலை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத காணியில் சந்தேகத்திற்கு இடமான பொதி இருப்பதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதில் குறித்த காணியில் இருந்து 195 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.