இலங்கை

பரபரப்பாகும் கொழும்பு அரசியல் ! 15 ஆம் திகதி மைத்ரி என்ன செய்வார் ? – ஒரு ஆய்வு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு அரசியலில் பரபரப்பான அறிவிப்பு ஒன்றை செய்வாரென பேசப்படுகிறது.

பெரும்பாலும் 15 ஆம் திகதி இந்த அறிவிப்பு செய்யப்படலாமென சொல்லப்பட்டாலும் யாரும் எதனையும் உறுதியாக சொல்வதாக இல்லை.

 

ஆனாலும் பலரிடம் பேசியபோது கிடைக்கப்பெற்ற  தகவல்கள் இவை…

 

1. மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் மற்றும் மாக்கந்துர மதுஷ் கொலைச்சதி விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்புகள் இருக்கலாமென கூறி அவரை பதவி நீக்கி சஜித் பிரேமதாஸவை புதிய பிரதமராக நியமிக்கக் கூடும் – என்று ஒருதரப்பு சொல்கிறது.

 

2. அல்லது – தூக்குத்தண்டனை பெறவுள்ளோரின் பெயர்கள் மற்றும் தண்டனை வழங்கப்படும் திகதி அறிவிக்கப்படலாம் – என்று இன்னொரு தரப்பு சொல்கிறது

 

3. அல்லது – ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று மற்றோரு தரப்பு சொல்கிறது.

 

இப்போதே உடனடி ஜனாதிபதித் தேர்தலுக்கு சென்றால் மஹிந்தவின் ஆதரவை பெறலாமென மைத்ரி கருதலாம். கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளவராக கருதப்படும் கோட்டபாயவின் அமெரிக்க குடியுரிமை இன்னும் ரத்துச் செய்யப்படாத காரணத்தினால் இப்போது களமிறங்க ஜனாதிபதி மைத்ரி முயலக் கூடுமென அந்த தரப்பு விபரிக்கின்றது.

 

4. அல்லது மாக்கந்துர மதுஷுடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை ஜனாதிபதி வெளியிடக் கூடும் என்று பிறிதொரு தரப்பு சொல்கிறது.

 

இவற்றில் எது நடக்கும் என்பது தெரியவில்லை.அதேசமயம் இவை எவையும் நடக்காமல் போகவும் கூடும்.

 

ஆனால் கொழும்பில் நேற்றுமுதல் ஒரு அரசியல் பரபரப்பு நிலவுகிறது. இவை தவிர வேறு எதுவும் கூட நடக்கலாம்.