Breaking News

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் 85 பேர் கைது

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் 85 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 10 பேர் பெண்கள்.
குற்றப் புலனாய்வுப் பிரினரால் கைது செய்யப்பட்ட 8 பெண்கள் அடங்கலாக 65 பேரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் அடங்கலாக 10 பேரும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் பலர் தேடப்பட்டு வரும் நிலையில், காத்தான்குடியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த சில தினங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் 78 பேர் கைது செய்யப்பட்டு, அத்தனைப் பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இந்த தகவல்களை வழங்கியுள்ளார்.