இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அனுமதியோம் – மஹிந்த சூளுரை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி அதற்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

இன்று காலை கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இதனை தெரிவித்தார். தமிழ் மற்றும் ஆங்கில ஊடகவியலாளர்களை இன்று காலை தனது சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை மிகவும் இரகசியமாக கொண்டுவந்து சபையில் நிறைவேற்ற அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டிய மஹிந்த ராஜபக்ச , அப்படி அது நிறைவேற்றப்பட்டாலும் தாம் ஆட்சிக்கு வந்தால் அதனை இரத்துச் செய்வாரென்றும் குறிப்பிட்டார்.

அரசின் முகாமைத்துவம் ஒழுங்காக இல்லாத காரணத்தினாலே மின்வெட்டு அமுலாக்கல் உள்ளதாக குறிப்பிட்ட அவர் தேர்தல்கள் பிற்போடப்படுவதால் தான் மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சின் வாக்கெடுப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டதாக குறிப்பிட்டார்.