உலகம்

பயங்கரவாதிகள் தாக்குதல்; 18 படையினர் நைகரில் பலி.

வடமேல் நைகரில், இராணுவ தளம் ஒன்றை இலக்கு வைத்து முஸ்லீம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் குறைந்தபட்சம் 18 படைத்தரப்பினர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முதலில் இந்த இராணுவ தளத்துக்கு அருகில் 2 கார் குண்டு தாக்குதல்களை நடத்தியதன் பின்னர், துப்பாக்கிதாரிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து அமெரிக்காவின் வான் படையினர் அவர்களை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர்.

இதன் பின்னர் பயங்கரவாதிகளின் தாக்குதல் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் முஸ்லிம் பயங்கரவாத குழுக்கள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இதே போன்ற தாக்குதல் ஒன்றில் 28 படையினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.