இலங்கை

பயங்கரவாதிகள் தப்பிச் சென்றனரா ? – விசாரிக்கிறது கடற்படை !

 

இலங்கையில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் 15 பேர் இந்தியா சென்றதாக வெளியான தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதாக கடற்படைப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் படகு ஒன்றின் மூலம் 15 பயங்கரவாதிகள் இந்தியாவின் லட்சத்தீவு பகுதிக்க தப்பிச் சென்றிருப்பதாக தகவல் வெளியானது.

இதனை அடுத்து கேரளக் கரையோரத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.

எனினும் அவ்வாறான தகவல் எவையும் கடற்படையினருக்கு கிடைக்கவில்லை என்று கூறிய அதன் பேச்சாளர், அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.