விளையாட்டு

பந்தயத்தில் தோற்ற ஹைடன் – மாறுவேடத்தில் சென்னையில் திரிந்தார் !

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மெத்தியூ ஹைடன் சென்னையில் பிரபலமான தி.நகருக்கு மாறுவேடத்தில் வந்து பொருட்கள் வாங்கியுள்ள விடயம் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரானமெத்தியூ ஹைடன், ஐ.பி.எல் மற்றும் டி.என்.பி.எல் போட்டிகளின்போது சென்னைக்கு அடிக்கடி வருவது வழக்கம்.

சென்னைக்கு வரும்போது மற்ற வீரர்களைப்போல் பேண்ட்ச் – ஷர்ட் அணியாமல், தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி – சட்டை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து அவருக்கு 2-வது சொந்த ஊராகவே சென்னை இருந்து வருகிறது.

சென்னையில் மிகவும் பிரபலமான எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடம் தி.நகர். இங்கு ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைக்கும். சில நாட்களுக்கு முன்பு, தி.நகரில் மாறுவேடமிட்டு வந்த மேத்யூ ஹைடன், கைக்கடிகாரம் ஒன்றை வாங்கியுள்ளார்.
முகத்தில் நீண்ட தாடி, வேட்டி – சட்டை அணிந்து வந்து எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் வந்துள்ள அவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்னிடம் பந்தயம் ஒன்றில் தோற்ற காரணத்தினால், தி.நகருக்கு மெத்தியூ ஹைடன் மாறுவேடத்தில் வந்து பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது.