Breaking News

பத்திரிகையாளர் உயிரிழப்பு குறித்து விசாரணை !

 

‘தி ஐலண்ட்’ பத்திரிகையாளர் ஸக்கி ஜபார் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

அவர் சில நாட்கள் காணாமல்போயிருந்த நிலையிலேயே அவரது சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் தனிமையில் வசித்தவந்த பத்திரிகையாளர் ஜபார் , சில நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை என சகபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உறவினர் ஒருவர் வீட்டுக்குள் சென்றவேளை மேற்படி பத்திரிகையாளர் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.