இலங்கை

பதுளையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

பதுளை தெமோதரை சௌதம் தோட்டம் மேற்பிரிவில் அமைந்துள்ள குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (07) மீட்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமோதரை சௌதம் தோட்டம் மேற்பிரிவில் 5 ஆம் கட்டையில் அமைந்துள்ள குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் குளத்தில் மிதப்பதை கண்டு பிரதேச மக்களால் எல்ல பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து சடலம் எல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் சௌதம் மேற்பிரிவை சேர்ந்த 74 வயதையுடைய பெரியம்மன் பெரியான் என எல்ல பொலிஸார் தெரிவிப்பதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.