Breaking News

பதுரலிய பாடசாலை குண்டுகள் குறித்தான உண்மைத்தன்மை என்ன ? – தினேஷ் சபையில் கேள்வி !

“ களுத்துறை மாவட்ட பதுரலிய பாடசாலை வளவுக்குள் 15 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இது பாரதூரமானது. இது எப்படி வந்தது? இதை கொண்டுவந்து போட்டவர்கள் யார் ? அரசு இதன் உண்மைத்தன்மையை அறிவிக்க வேண்டும்.நாட்டு மக்கள் பாதுகாப்பு குறித்து யோசித்துக் கொண்டிருக்கும்போது இப்படி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை சாதாரண விடயம் அல்ல. அரசு இந்த சபையில் அதன் உண்மைத்தன்மையை இன்று சொல்ல வேண்டும்..”

– பாராளுமன்றத்தில் அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்போது தினேஷ் குணவர்தன எம் பி இவ்வாறு குறிப்பிட்டார்