Breaking News

பதில் அமைச்சர் நியமனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்ல நடவடிக்கை !

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்மாரது இடங்களுக்கு பதில் அமைச்சர்மாரை ஜனாதிபதி நியமித்தமை சட்டவிரோதமானதென தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அமைச்சர் ஒருவர் வெளிநாடு சென்றிருந்தால் அல்லது சுகயீனமுற்றிருந்தால் மட்டுமே பதில் அமைச்சர் நியமிக்கப்படலாமென்றும் – பதவியை அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்திருந்தால் அந்த இடத்திற்கு பதில் அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாதென்றும் சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ஒருவர் பதவி இராஜினாமா செய்தால் இன்னொரு அமைச்சருக்கு அதன் இலாகாக்களை பிரித்து வழங்க முடியும் என சொல்லப்படுகிறது.