உஷ்... இது இரகசியம் !

பதவி வேண்டுமா? நாடு பற்றி எரிய வேண்டுமா? – ஆளுனர் ஒருவரிடம் கேட்டார் மைத்திரி

 

ஆளுனர் ஒருவரை தொலைபேசியில் அழைத்த மைத்திரி, அவரை பதவி விலகும்படி கேட்டாராம்.

‘நாட்டு நிலைமைகளை பார்க்கிறீர்கள்தானே? தேரர்களின் போராட்டத்தை சாதாரணமாக கருதிவிட வேண்டாம்’ என்றாராம்.

அதற்கு ஆளுனர் ‘அவர்கள் இனவாதமாக செயற்படுவதை நீங்களும் அனுமதிக்கக்கூடாது’ என்று கூறினாராம்.

‘இதை இப்படியே விட்டால் நாடே பற்றி எரியும். நான்தான் பதவியை கொடுத்தேன், இப்போது நானே அதனை கேட்கிறேன். உமக்கு பதவி வேண்டுமா? நாடே பற்றி எரிய வேண்டுமா?’ என்று மைத்திரி கேட்டாராம்.

‘எல்லாம் எங்களுக்கு பாதகமாக இருக்கிறது. உங்கள் விருப்பப்படியே பதவி விலகுகிறேன்’ என்றாராம் அந்த ஆளுனர்.