பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது
பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 27 வயதுடைய நபரொருவரை இரத்மானை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரின் வங்கிக்கணக்கில் சுமார் 136 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இந்த பணம் வெளிநாடுகளில் இருந்து இவ்வாறு இளைஞனின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.