இலங்கை

பட்ஜெட் – ஆதரவும் எதிர்ப்பும் !

இன்றைய வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிர்க்கட்சியும் ஜே வி பியும் தீர்மானித்துள்ளன .

அதேசமயம் தமிழ் முற்போக்கு முன்னணி ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தகவல் .

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்ய உத்தேசித்துள்ளது. ஆனால் சிலர் கலந்து கொண்டு எதிர்த்து வாக்களிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.