இலங்கை

பட்ஜெட்டுக்கு ஆதரவா இல்லையா? சுதந்திரக்கட்சி – கூட்டு எதிர்க்கட்சி முடிவு நாளை !

நாளை இறுதி வாக்கெடுப்புக்கு வரவுள்ள அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து நாளை காலை ஜனாதிபதி தலைமையில் கூடி இறுதி முடிவொன்றை எடுப்பதென இன்று பாராளுமன்றத்தில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத் குழு முடிவு செய்துள்ளது.

அதேசமயம் கூட்டு எதிர்க்கட்சியும் நாளை இது விடயத்தில் கூடி ஒரு முடிவை எடுக்கவுள்ளது.

வாக்கெடுப்பு வாக்களிப்பு தொடர்பில் இன்று ஜனாதிபதி மைத்ரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த தலைமையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம் பிக்கள் பேச்சு நடத்தியபோதும் அது இணக்கப்பாடு இல்லாமல் முடிவடைந்தது.

எவ்வாறாயினும் இறுதி வாக்கெடுப்பு குறித்து மைத்ரியும் – மஹிந்தவும் பிடிகொடுக்காமல் இறுதிநேரம்வரை காத்திருப்பது அதிரடி முடிவொன்றுக்காக இருக்கலாமென உள்ளகச் செய்திகள் கூறுகின்றன.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில்….