இலங்கை

பசில் – ஹக்கீம் முக்கிய பேச்சு !

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று நடந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் நடந்த இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தெரிவில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அரசியல் கூட்டணி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ள பின்னணியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.