விளையாட்டு

பங்களாதேஸ் – இலங்கை போட்டி: அரிதான சாதனை

 

2019 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் லீக் போட்டிகளில் நேற்று பங்களாதேஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த போதும், மழை காரணமாக கைவிடப்பட்டது.

இதன்படி இந்த தொடரில் மூன்று போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளன.

1975ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, மழை காரணமாக அதிகபடியான போட்டிகள் கைவிடப்பட்டமை இந்த தொடரிலாகும்.

இதேவேளை, இந்தமுறை போட்டி இடம்பெறும் காலப்பகுதியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முன்கூட்டியே அறிந்திருந்த போதும், மேலதிக நாட்களை ஒதுக்காமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.