Breaking News

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி !

 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் வேகப்பந்துவீச்சாளருமான மஷ்ரபீ மோர்தஸாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது சகோதரர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு (19) மேற்கொள்ளப்பட்ட உடல் பரிசோதனையின் முடிவு சற்றுமுன்னர் வெளியாகிய நிலையில் மஷ்ரபீ மோர்தஸாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மஷ்ரபீ மோர்தஸா சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சனிக்கிழமை (13) பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஹீட் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

– அக்கீல் ஷிஹாப் –