உலகம்

பங்களாதேஷ் அகதிகளுக்கு நில உரிமை

 

1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் யுத்தத்திற்கு பின்னர் நாட்டை விட்டு வெளியேறி, மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்த அகதிகளுக்கு நில உரிமையை வழங்குவதற்கு, இந்திய மேற்கு வங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தனியாருக்கு அல்லது அரசுக்கு சொந்நமான நிலத்தில் அகதிக் குடியேற்றப் பகுதிகளை முறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதலமைச்சர்ம மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவு செயன்முறை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய அரசு அறிவிப்பின் பின்னணியில் மேற்கு வங்க அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘அகதிக் குடும்பங்களுக்கு இன்னும் சொந்தமாக எந்த நிலமும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. சிலர் அரசு, மத்திய அரசு அல்லது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் வாழ்கின்றனர். சுமார் 1.25 இலட்சம் குடும்பங்கள் உள்ளன. மத்திய அரசு நிலத்தில் வசிக்கும் சுமார் 55,000 குடும்பங்களையும், மாநில அரசு நிலத்தில் வாழ்ந்த 13,353 குடும்பங்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்,’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று ஏக்கர் வரை அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள அனைத்து அகதி முகாம்களும் முறைப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

“பலருக்கும் விவசாய நிலங்கள் உள்ளன. மாநில அரசு முன்னர் 94 அகதி முகாம்களை மாநில அரசுக்கு சொந்தமான நிலத்தில் அமைத்துள்ளது. என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதிகள் தங்கியுள்ள குடியிருப்புகள் அனைத்தும் மத்திய அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ளன. இவற்றை சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலம் அம்மக்களுக்கு சொந்தமாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளும் பணிகள் உள்ளன.