விளையாட்டு

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.

 

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 117 ரன்களுடன் தத்தளித்த பங்களாதேஷ் அணியை விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (98 ரன், 110 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) சிறப்பாக ஆடி நல்ல நிலைக்கு கொண்டு சென்றார்.

முன்னதாக ரஹிம் 8 ரன் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது பங்களாதேஷ் வீரர் என்ற சிறப்பை பெற்றார். அடுத்து களம் கண்ட இலங்கை அணி 44.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவிஷ்க பெர்னாண்டோ (82 ரன்), மேத்யூஸ் (52 ரன்) அரைசதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.