Breaking News

“பக்தாதி கொல்லப்பட்டார் – புதிய தலைவர் குரேஷி..” – ஐ எஸ் அறிவிப்பு !

 

அமெரிக்காவின் தாக்குதலால் தமது இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டாரென சற்றுமுன் அறிவித்துள்ள ஐ எஸ் ஐ எஸ் இயக்கத்தின் பேச்சாளர்,
புதிய தலைவராக அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி நியமிக்கப்பட்டுள்ளாரென தெரிவித்துள்ளார்.

அதேசமயம் சவுதியை பிறப்பிடமாக கொண்ட இயக்கத்தின் பேச்சாளர் அபூ ஹசன் அல் முஹாஜிர் கொல்லப்பட்டதையும் ஐ எஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தலைமையை கொன்றதாக சந்தோசப்படவேண்டாமென அமெரிக்காவை எச்சரித்துள்ள ஐ எஸ் பேச்சாளர் , மத்திய கிழக்குக்கு வெளியேயும் தமது தாக்குதல்கள் தொடருமென சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது இயக்கத்தின் உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் பக்தாதியின் செப்ரெம்பர் மாத இறுதி உரையை பின்தொடர்வார்களென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.