இலங்கை

நோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன !

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள நேரத்தில் நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா புளியாவத்தை நகரபகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு ஐந்து லட்ச ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டுள்ளன.

சாஞ்சிமலை அட்டன் பிரதான வீதியின் புளியாவத்தை நகரமத்தியிலுள்ள மதுபானசாலையே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதுடன் மதுபானசாலை உரிமையாளரின் முறைப்பாட்டுக்கமைய விசாணையை ஆரம்பித்துள்ள நோர்வூட் பொலிஸார் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யபடவில்லையெனவும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
எம்.கிருஸ்ணா