Breaking News

நொதேர்ன் பவர் நிறுவனத்திற்கு 2 கோடி ரூபா அபராதம் !

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பான வழக்கில் நொதேர்ன் பவர் நிறுவனத்திற்கு 20 மில்லியன் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வலிகாமத்தை அண்டிய பகுதிகளின் நிலத்தடி நீரை அசுத்தப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், இழப்பீடாக இந்த பணத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது.

சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தினால் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நொதேர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டால், சுன்னாகத்தை அண்டிய பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்தது என வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், நொதேர்ன் பவர் நிறுவன மின் உற்பத்திக்கு தடைவிதித்ததுடன், வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டு சில வருடங்களாக உயர்நீதிமன்றத்தில் நீடித்த வழக்கிற்கு முடிவு எட்டப்பட்டுள்ளது.

.