உலகம்

நொட்ரே-டேம் தேவாலய தீப்பரவலுக்கு சிகரெட் தான் காரணமா?

 

பிரான்சின் புகழ்பெற்ற நொட்ரே-டேம் தேவாலயம் கடந்த ஏப்ரல் மாதம் தீப்பற்றி பெரும் சேதத்தை சந்தித்தது.

இதற்கான காரணம் சரியாக அணைக்கப்படாமல் எறியப்பட்ட சிகரெட்டாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப் பட்டுள்ளது.

அதேநேரம் மின்சார கசிவு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த தீப்பரவலுடன் குற்றத்தொடர்புகள் எதுவும் இல்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.