உலகம்

நைஜீரிய தூதரகத்தை தற்காலிகமாக மூடிய தென்னாபிரிக்கா

 
தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுவரும் இனவெறி வன்முறைகளை அடுத்து, பழிவாங்கும் நோக்கோடு நைஜீரியாவில் இடம்பெற்று வரும் தாக்குதல்களை அடுத்து தென்னாபிரிக்கா நைஜீரியாவிலுள்ள தனது தூதரகத்தை  தற்காலிகமாக மூடியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரையான காலப்பகுதியில் தென்னாபிரிக்காவின் வணிக நகரான ஜொஹனஸ்ன்ஸ்பர்க்கில், அமைந்துள்ள வெளிநாட்டவர்க்கு சொந்தமான கடைகளை வன்முறையாளர்கள் தாக்கியழித்துள்ளனர்
நைஜீரிய அரசு இந்த வன்முறைகளை வெளிப்படையாகக் கண்டித்துள்ளது.
இதேவேளை தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் இது தனது நாட்டுக்கு சிக்கலுக்குரிய விடயம் எனத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்க்கு சொந்தமான கடைகள் மீது தாக்குதல் நடத்தியமை அல்லது தென்னாபிரிக்காவில்

வசிக்கும் பிற நாடுகளைச் சேர்ந்த ஆபிரிக்க இனத்தவர்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் தமது அரசு கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.