உலகம்

நைஜீரியாவில் தாக்குதல்; 25 பேர் பலி, 60 பேர் காயம்மேற்கு நைஜீரியாவில் இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாட்டின் மாலி எல்லையில் உள்ள சினகோத்ரார் நகரில் உள்ள ஒரு இராணுவ தளம் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதலில், 60ற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.