உலகம்

நைஜீரியாவில் தற்கொலை தாக்குதல்கள்

 

நைஜீரியாவில் வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்று தற்கொலை குண்டு தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 39 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தற்கொலை குண்டு தாக்குதல்களை இரண்டு இளம் வயதான பெண்களும் ஒரு இளைஞனுமே மேற்கொண்டுள்ளனர்.

முதலாவது தாக்குதல் திரை அரங்கிற்கு முன்னால் இடம்பெற்ற நிலையில், அதில் 24 பேர் கொல்லப்பட்டனர்.

முதலாவது தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் மேலும் இரு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை.