விளையாட்டு

நேபாளம் தொடர்ந்தும் முதலிடத்தில்; இலங்கைக்கு இதுவரை 5 தங்கங்கள் !

 

தெற்காசிய விளையாட்டு விழாவின் நான்காவது நாள் போட்டிகள் இன்று நடைபெறுகின்ற நிலையில், பதக்கப்பட்டியலில் நேபாளம் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள, தஸரத் ரங்கசால விளையாட்டரங்கில் கோலகலமாக 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா ஆரம்பமhனது.

பதக்கப்பட்டியலுக்கு அமைய, நேபாளம் 23 தங்கம், 9 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் அடங்கலாக, 44 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியா 15 தங்கம், 16 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் அடங்கலாக, 40 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இலங்கை 5 தங்கம், 14 வெள்ளி மற்றும் 27 வெண்கலம் அடங்கலாக, 46 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தப்படியாக, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவுகள், பூட்டான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவானாது, மூன்றாவது தடவையாக நேபாளத்தில் நடைபெறுவதோடு, மொத்தமாக 27 போட்டிகளில்இ 17 போட்டிகள் காத்மண்டுவிலும் 10 போட்டிகளில் 9 போட்டிகள் பெக்கஹரா நகரிலும் மல்யுத்தப் போட்டிகள் மாத்திரம் ஜனக்பூரிலும் நடைபெறுகின்றன.

இம்முறை போட்டிகளில் இலங்கை சார்பாக 622 வீரர்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.