உலகம்

நேபாளத்தில் மூலிகை தேடி உயிரிழந்த 8 பேர்

 

நேபாளத்தின் டோல்பா மாவட்டத்தில் அரிதான யார்சகும்பா என்ற மூலிகையை திரட்டும் போது கடந்த ஒருவார காலத்தில் குறைந்த பட்சம் 8 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் ஐந்துபேர் மர்மமான காய்ச்சல் காரணமாகவும் ஏனையோர் பள்ளத்தில் விழுந்தும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இமாலய மலைத்தொடரில் சுமார் 10000 அடி உயரத்தில் இந்த அரிதான மூலிகை கிடைக்கப்பெறுகிறது.

விலை உயர்ந்த இந்த மூலிகை இமாலய வயாக்ரா என்றும் அழைக்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.