உலகம்

நெருக்கடியில் தெரேசா மே

 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் விடயத்தில் பிரதமர் தெரேசா மே பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் முன்வைத்த புதிய ஒப்பந்தத்துக்கு கடந்த தினம் பிரித்தானிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

எனினும் ஆளும் கட்சிக்குள் இதுதொடர்பில் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் ஆளும்கட்சியினருக்கு புதிய ஒப்பந்தம் தொடர்பிலான விளக்கமளிப்பை பிரதமர் வழங்கவுள்ளார்.

இதேவேளை கன்டர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியும் அவரை நெருக்குதலுக்கு உள்ளாக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.